loader
வர்த்தக லைசென்ஸை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை! - அமைச்சர் எச்சரிக்கை

வர்த்தக லைசென்ஸை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை! - அமைச்சர் எச்சரிக்கை

 

கோத்தா பாரு, டிசம்பர் 12: வர்த்தகத்திற்கான உரிமத்தை தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான் ஶ்ரீ அனுவார் மூசா எச்சரித்துள்ளார்.

சுதந்திரமாக வணிக செய்யும் திட்டமான WBB-இன் கீழ் உள்ள வணிக உரிமத்தை, அந்நிய நாட்டவர்களுக்கு வழங்கி தவறாகப் பயன்படுத்தும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவாடிக்கை எடுக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்டவரை கருப்புப் பட்டியலிட்டு, அவர்களின் லைசென்சுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவர்களுக்கான உரிமம் திரும்ப வழங்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு ஒரு லைசன்ஸ் மட்டுமே கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக டான் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

கோலாலம்பூரில், சில பகுதிகளில் வணிகத் தளங்களைத் திறப்பதற்காக, குறிப்பாகக் கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து WBB திட்டத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை வரையில் 3,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில்,  1,700 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News