loader
மூடப்படுகிறது யாஹூ நிறுவனம்! டிசம்பர் 15 லிருந்து மெயில் அனுப்ப முடியாது!

மூடப்படுகிறது யாஹூ நிறுவனம்! டிசம்பர் 15 லிருந்து மெயில் அனுப்ப முடியாது!

டிசம்பர் 15 முதல் மக்கள் இனி யாஹூ கணக்கிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று யாஹூ  நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே யாஹு தொடர்ந்து நிலையான சரிவை எதிர்கொண்டு வருகின்றது. மேலும் கடந்த சில நாட்களாகவே யாஹு இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாகவும் அதை மூட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  மற்ற போட்டியாளர்களான கூகுள் நிறுவனம் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் உடன் போட்டி போட முடியாத காரணத்தினால் இந்த முடிவை யாஹூ எடுத்துள்ளது.

அதன்படி டிசம்பர் 15 முதல் மக்கள் யாஹு குரூப்பில் இருந்து மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று அமெரிக்காவின் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை நிறுவனமான வெரிஸோன் தெரிவித்துள்ளது.

மேலும் வலைத்தளங்களை அணுக முடியாது. நீங்கள் அனுப்பிய மற்றும் பெறப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் உங்களது ஈமெயிலில் இருக்கும். ஆனால் உங்கள் குரூப் நண்பர்களுக்கு அனுப்பப்படாது அல்லது பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News