loader
மலேசிய எழுத்தாளருக்கு தமிழக விருது!  கோலாலம்பூர், டிசம்பர் 6- ஆண்டுதோறும்

மலேசிய எழுத்தாளருக்கு தமிழக விருது! கோலாலம்பூர், டிசம்பர் 6- ஆண்டுதோறும்

 மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் தமிழ்ப் படைப்புகளுக்கு ‘கரிகாற்சோழன் விருது’ தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

இம்முறை, மலேசிய எழுத்தாளர் தலைநகர் சத்யா பிரான்சிஸ் அவ்விருதினைப் பெற்றுள்ளார். 'நம் நாடு', 'தமிழ் மலர்' பத்திரிகைகளில் நிருபராகப் பணியாற்றிதோடு, பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார் இவர். இந்நிலையில் இந்த விருது குறித்து மலேசிய எழுத்தாளர் சங்கம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் தொழிலதிபர் முஸ்தபா அறக்கட்டளை சார்பாக, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், அயலக கல்வித்துறையில் தமிழவேள் கோ சாரங்கபாணி ஆய்விருக்கை வழியாக, அயல் நாட்டுத் தமிழ் படைப்புகளுக்கு, இந்த அங்கீகாரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், 2018 ஆம் ஆண்டுக்குரிய மலேசியாவிற்கான விருது சத்யா பிரான்சிஸ் எழுதிய 'வானம் என் போதி மரம்' எனும் கவிதை நூலுக்கு வழங்கப்பட்டதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. ராஜேந்திரன், தெரிவித்தார்.

கரிகாற்சோழன் விருதுக்கான மலேசிய ஒருங்கிணைப்பாளராக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், இந்த விருது தனது எழுத்துத் துறைக்கு கிடைத்த பெருமை என்று எழுத்தாளர் சத்யா பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற விருதுகள், எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பாக அமைவதுடன், அதிகமான இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்!

0 Comments

leave a reply

Recent News