loader
ரஜினி கட்சியின் கொடி, சின்னம், பெயர் இதுதானா?!

ரஜினி கட்சியின் கொடி, சின்னம், பெயர் இதுதானா?!

 

ரஜினி ஜனவரியில் எந்தத் தேதியில் கட்சி ஆரம்பிக்க உள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைவிட கட்சிக்கு என்ன பெயர் வைக்கப்பட உள்ளது? கொடி எவ்வாறு வடிவமைக்கப்பட உள்ளது? என்ற விவாதம் தற்போது கிளம்பியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகள் ‘கழகம்’ என்றே பெயரை அமைத்துள்ளன. திமுகவின் பாதிப்பிலிருந்தே அதிமுக உட்பட பல கட்சிகளின் பெயர்களில் ‘கழகம்’ என்பது இணைந்தது. புதிதாக கட்சி தொடங்குபவர்கள், ஆட்சியமைக்கத் துடிப்பவர்கள் திமுக, அதிமுகவுக்கு மாற்று என தங்களைக் கூறிவருகின்றனர். பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கழகங்கள் இல்லாத ஆட்சி என்ற கோஷத்தை அடிக்கடி முன்வைக்கின்றன. அண்மையில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன் கழகம், கட்சி ஆகியவற்றிலிருந்து சற்று விலகி ‘மய்யம்’ என்று வைத்துக் கொண்டார்.

அந்தவகையில் ரஜினிகாந்தும் கழகங்களுக்கு மாற்றாகத் தன்னை முன்னிலைப்படுத்துவதால் கட்டாயம் கழகம் இருக்காது என அடித்துக் கூறுகின்றனர். அதேசமயம் வேறு என்ன இடம்பெறலாம் என்ற பரிசீலனையும் நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் சைவ சமயம் மேல் தீவிர ஈடுபாடு கொண்டவர். தனது படங்களிலேயே அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா எனப் பெயர்கள் வைத்து வெற்றிப் படங்களாக்கியவர். அந்த வகையில் ‘படை’ என்று முடியும் வகையில் கட்சி பெயர் அமையவுள்ளதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அதே போல் கட்சிக் கொடி வடிவமைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. ரஜினி ரசிகர்கள் தற்போது நீலம், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களிலும் நடுவில் ஸ்டார் சின்னத்தில் ரஜினிகாந்த் படத்தை பொறித்தும் கொடி பிடிக்கின்றனர். இது சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதை பொருள்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் ரஜினியின் கட்சிக் கொடி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்கின்றனர்.

கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே இடைவெளி இருக்கும். கட்சியின் தலையீடு ஆட்சியில் இருக்காது. முதல்வர் வேட்பாளராக நான் இருக்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறிவந்துள்ளதால், கட்டாயம் ரஜினியின் புகைப்படம் கொடியில் இடம்பெறாது என அடித்துக் கூறுகின்றனர்.

வேறு என்ன சின்னம் கொடியில் இடம்பெறும் என்கிற ஊகங்களும் எழுந்துள்ளன. ரஜினிகாந்த் 2017-ஆம் ஆண்டு ரசிகர்களைச் சந்தித்த போது அமைக்கப்பட்ட மேடையின் புகைப்படத்தை உதாரநம் காட்டுகிறார்கள் சிலர். அதில் தாமரை மீது பாபா முத்திரை இடம் பெற்றிருக்கும். கொடியில் தாமரை இருக்கிறதோ இல்லையோ பாபா முத்திரை இருக்கலாம் என்கிறார்கள்!

0 Comments

leave a reply

Recent News