loader
PKPB அமலாக்கத்தால் நாள் ஒன்றுக்கு 30 கோடி இழப்பு!

PKPB அமலாக்கத்தால் நாள் ஒன்றுக்கு 30 கோடி இழப்பு!

 

கோலாலம்பூர், டிசம்பர் 5-  கோவிட்-19 சம்பவங்கள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, சில மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, PKPB-யை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

நடப்புச் சூழ்நிலை மற்றும் பொருளாதாரச் சிக்கலைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

PKPB தொடர்ந்து அமல்படுத்தப்பட்டால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாள் ஒன்றுக்கு 30 கோடி வெள்ளி இழப்பு ஏற்படும். என்றும்,  இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் பாதுகாப்பான நடவடிக்கையை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News