loader
வைரலாகும்  கரப்பான் பூச்சி சவால்!

வைரலாகும் கரப்பான் பூச்சி சவால்!

கோலாலம்பூர் மே-10

சமூக வலைதளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு நூதன சாகசத்தைச் செய்து, அதை வைரல் ஆக்கும் டிரெண்ட் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
அண்மையில் ஒரு நபர் நீர் வாளியில் ஐஸ்கட்டியை நிரப்பி, அதை அவர் தலையில் உற்றிவிட்டு  இன்னொரு நபரைச் சவாலுக்கு  அழைக்கும் விளையாட்டு அரங்கேறியது. அதன் பின் காரில் இருந்து இறங்கி ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் சாகசம் அரங்கேறியது.
இப்போது 'பாசை' என்று நாம் அழைக்கும் கரப்பான் பூச்சியை முகத்தில் வைத்து வீடியோ செய்து வெளியிடும் ஒரு சவால் வைரலாகி வருகிறது. இதைப் பலரும் சவாலாக ஏற்றுச் செய்யத்தொடங்கி இருப்பதுதான் ஆச்சரியம்.  கரப்பான்பூச்சியை வாயில் விடும் அளவுக்கு இந்தச் சவாலின் சாகசம் உச்சத்தை எட்டியுள்ளது. மியன்மார், ஃபிலிப்பைன்ஸ் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்தச் சவாலை ஏற்று எண்ணற்ற சமூக வலைதள வாசிகள் கரப்பான் பூச்சி ஊரும் முகத்தோடு திரிகின்றனர்.

மலேசியர்கள் பொதுவாகக் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே 10 அடி தள்ளிச் சென்றுவிடுவார்கள்.
அதைக் கண்டதும் உடம்பில் அது ஊருவது போல்  உணர்வார்கள். அதுமட்டுமின்றி பெண்கள் கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே அலறுவார்கள்.
ஆகையால் இந்தத் தாக்கம் மலேசிய மக்களைக் கவராது என நம்பலாம்!

0 Comments

leave a reply