loader
2 வெள்ளியாகிறது பெட்ரோல் விலை!

2 வெள்ளியாகிறது பெட்ரோல் விலை!

 

பெட்டாலிங் ஜெயா: பெட்ரோல் டீசல் விலை உயர்வு காண்கிறது. நாளை டிசம்பர் 5-ஆம் தேதி முதல் டிசம்பர் 11 -ஆம் தேதி வரை இந்த புதிய விலை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

RON 97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM 2 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு RM 1.97 ஆக இருந்த RON 97 விலை தற்போது மூன்று சென் உயர்வு காண்கிறது.

RON 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM 1. 67 லிருந்து RM 1.70 ஆக மூன்று சென் உயர்வு காண்கிறது.

அதே நேரத்தில் டீசலின் விலை லிட்டருக்கு RM 1.85 லிருந்து RM1.90 ஆக ஐந்து சென் உயர்வு காண்கிறது.

உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News