loader
நிலவில் தரையிறங்கிய சீன விண்கலம்!

நிலவில் தரையிறங்கிய சீன விண்கலம்!

பீஜிங்: அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் வரிசையில் சீனாவும் நிலவை ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் 1976-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்களைப் பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது.

இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24 ஆம் தேதி  சீனா விண்ணில் செலுத்தியது. அந்த நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது. 

இந்த விண்கலம் நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கியது. தரையிறங்கும் மேற்பரப்பில் தரையிறங்கும் காட்சி  படங்களையும் சீன அரசு  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த விண்கலம் மூலம் நிலவில் இதுவரை கால் பதிக்காத பகுதியான ‘ஓஷன் ஆப் ஸ்டார்ம்ஸ்’ என்ற பகுதியிலிருந்து 2 கிலோ பாறை துகள்ளை எடுக்க சீனா திட்டமிட்டுள்ளது.

சீனாவின் இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், அமெரிக்கா ரஷியாவிற்குப் பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெறும்!

0 Comments

leave a reply

Recent News