loader
கொரோனா தடுப்பூசி! 100 % செயல்திறன் கொண்டது! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசி! 100 % செயல்திறன் கொண்டது! அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு!

வாஷிங்டன்: கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில், உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன.

அந்த வகையில் அமெரிக்காவின் மாடர்னா என்ற மருந்து நிறுவனம் கொரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசி மனிதர்களிடம் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது.

இந்த நிலையில், தங்களது தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள நபர்களிடம் 100 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என்பதை உறுதி செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியைத் தயாரித்துள்ள அமெரிக்காவின் பைசர் நிறுவனம், தங்களது தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் திறன் வாய்ந்தது என அறிவித்து, அதை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News