loader
திருவண்ணாமலை தீபத் திருவிழா! இணயம் வழி நேரலை!

திருவண்ணாமலை தீபத் திருவிழா! இணயம் வழி நேரலை!

 

கோலாலம்பூர்  நவம்பர்-29

உலகப் பிரசித்திபெற்ற திருவண்ணாமலை திருக்கோயில் தீபத் திருவிழா இம்மாதம் 29- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கோவிட் -19 தாக்கத்தின் காரணமாகத் தீபத்திருவிழாவை நேரடியாகச்  சென்று தரிசனம் பெற  முடியாத பக்தர்களுக்கு மாற்று வழியாக,  இணையம் வழி நேரலை ஒளிபரப்பாகவுள்ளது.

வரு. 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மலேசிய நேரப்படி இரவு 8.25 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, 8.29 மணியளவில் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் என, சத்குரு ஸ்ரீ அன்பே அருணாச்சலநந்தா சுவாமிகள் இணையம் வழி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மலேசிய மக்களுக்கு இந்த அறிவிப்பினை வழங்கினார்.

மகா தீபம் ஏற்றும்போது முக்கோடி தேவர்களும் அண்ணாமலையை நோக்கி வருவார்கள் எனக் கூறப்படுகிறது.

ஆகையால், அந்தக் காட்சியை மலேசிய பக்தர்களும் நேரலை வாயிலாகக் கண்டு ஆசி பெற  இந்த நேரலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகா தீபம் ஏற்றப்பட்ட பின்னர்,  இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு விசேஷ தியானமும் உண்டு.

இணையம் வழி நடத்தப்படும் இந்தச் சிறப்பு தியான நிகழ்ச்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என மலேசிய ஒருங்கிணைப்பாளர் பிரேமி மைக்கல் மற்றும் லிங்கேஸ்வரன் தெரிவித்தனர்.

இந்தத் தீபத் திருவிழாவை
MULAVARGA SIDDHA PARAMPARA என்னும் முகநூல் அகபக்கத்தில் பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.

தீபத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அன்றைய தினம் சைவமாக இருக்கவேண்டும். அதோடு தியானத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, ஆகாரம் உண்ணவோ,  நீர் அருந்தவோ கூடாது. தியானம் முடிந்து அரை மணி நேரம் கழித்துதான் உணவு உட்கொள்ளவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்!

5 Comments

  • Sivajnani Nagappan
    2020-11-27 17:47:31

    Anbe Sivam. Om Namasivaya

  • Anantha Krishnan
    2020-11-27 22:08:38

    Tq for sharing this

  • Thenmoli muniandy
    2020-11-28 07:40:18

    Good

  • Thenmoli muniandy
    2020-11-28 07:42:14

    👍

  • GEETHA A/P SELVADURAI
    2020-11-28 09:52:13

    Good idea.👍🙏🙏🙏Om NAMA SIVAYA.

leave a reply

Recent News