loader
பிடிபிடிஎன் கடன் தள்ளுபடி விவகாரம்! உயர் கல்வி அமைச்சு ஆலோசனை!

பிடிபிடிஎன் கடன் தள்ளுபடி விவகாரம்! உயர் கல்வி அமைச்சு ஆலோசனை!

பிடிபிடிஎன் கடன் தள்ளுபடி தொடர்பாக கால அவகாசத்தை நீட்டிக்க, உயர்கல்வி அமைச்சகம் நிதி அமைச்சகத்துடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் நோராய்னி அகமட் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பிடிபிடிஎன் கடன் பெற்றவற்களுக்கான தள்ளுபடியை அரசாங்கம் நீட்டிக்குமா? இல்லையா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கடன் பெற்றவர்களுக்கு இதுவரைக்கும் இரண்டு கடன் தள்ளுபடி நீட்டிப்புகள் வழங்கப்பட்டதாகவும், இது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் நோராய்னி அகமட் கூறினார்.

எனினும் கடன் பெற்ற 4,22,609  பேர் தங்களின் கடன்களை முறையாகச் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், கோவிட் -19 பெருந்தொற்று பரவலால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் இவ்வேளையில்,  பிடிபிடிஎன் கடனுக்கான பணத்தைச் செலுத்தாதவர்களைத் தடுப்புப்பட்டியலில் தமது அமைச்சு சேர்க்காது என்று அவர் உறுதியளித்தார்!

0 Comments

leave a reply

Recent News