loader
அந்நிய தொழிலாளர்களுக்கான கோவிட்-19 சோதனை ! முதலாளிமார்களுக்கு மானியம்! சரவணன் அறிவிப்பு!

அந்நிய தொழிலாளர்களுக்கான கோவிட்-19 சோதனை ! முதலாளிமார்களுக்கு மானியம்! சரவணன் அறிவிப்பு!


பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 25: வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவன், நெகிரி செம்பிலான், பினாங்கு மற்றும் சபா ஆகிய பகுதிகளின் முதலாளிகளுக்கு, கட்டாய கோவிட் -19 திரையிடலுக்கான மானியம் விரைவில் வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

அந்த மாநிலங்களில் பணிபுரியும், சொக்ஸோ பங்களிப்பாளர்களாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மானியத்திற்கு தகுதியுடையவர்கள் என்றும்,  இதற்காகப் பதிவு செய்யப்பட்ட கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் ஆர்.டி.கே-ஆன்டிஜென் பரிசோதனையை எடுக்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.

ஒவ்வொரு சோதனைக்கும் RM 60 வரை ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு முறை மட்டும் சொக்சோ வழி மானியம் கிடைக்கும் என்று அவர் புதன்கிழமை (நவம்பர் 25) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட கிளினிக்குகளின் விவரங்களை psp.perkeso.gov.my எனும் அகப்பக்கத்தில் காணலாம்.

மானியத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன் முதலாளிகள், சோதனைகளுக்கான கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டும் என்று சரவணன் கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான், நெகிரி செம்பிலான், பினாங் மற்றும் சபா ஆகிய இடங்களில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டுத் தொழிலாளர்களும் கட்டாய கோவிட் -19 திரையிடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த நவம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News