loader
6 மாநிலங்களில் வானிலை மோசமாக இருக்கும்!  - மெட் மலேசியா எச்சரிக்கை

6 மாநிலங்களில் வானிலை மோசமாக இருக்கும்! - மெட் மலேசியா எச்சரிக்கை

சிலாங்கூர் நவம்பர் -24

தீபகற்ப மலேசியாவில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கி வானிலை மோசமாக இருக்கும் எனவும், சில  இடங்களில் கனமழை பெய்யும் என்றும் மெட் மலேசியா எனப்படும் மலேசியா வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

திரங்கானு, கிளந்தான், பகாங், கெடா, பெர்லிஸ் மற்றும் பேராக் ஆகிய 6 மாநிலங்களில் வானிலை மிக மோசமாக இருக்கும் என மெட் மலேசியா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

27 ஆம் தேதி தொடங்கி  திரங்கானு மாநிலம் முழுவதும் கனமழை தொடர்ச்சியாக பெய்யும் என்றும், கிளந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு, பாச்சோக், மாச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கோல கெராய் பகுதிகளிலும், பகாங் மாநிலத்தில் குவாந்தான் பகுதியிலும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெடாவில் லங்காவி, குபாங் பாசு, கோத்தா ஸ்டார் பொக்கோக் சேனா, பாடாங் தெராப், பென்டாங், சிக் பாலிங் பகுதிகளிலும், பெர்லிஸ் மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 27 ஆம் தேதி வரை வானிலை மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து, கிளந்தான் மாநிலத்தின்  தும்பாட், பாசீர் மாஸ், ஜெலி, தானா மேரா மற்றும் குவா மூசாங் பகுதியிலும், பகாங் மாநிலத்தில் ஜெராந்துட், தெமர்லோ, மாரான், பெரா, பெக்கான், ரொம்பின் பகுதிகளிலும், பேராக் மாநிலத்தில் உலு பேராக், கோலா கங்சார், கிந்தா பகுதிகளிலும் நவம்பர் 27ஆம் தேதி வரை கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News