loader
குடி இருப்பவர்களுக்கும் குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி! - சவுதி மன்னர் அறிவிப்பு

குடி இருப்பவர்களுக்கும் குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி! - சவுதி மன்னர் அறிவிப்பு

அபுதாபி: கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைத்து குடிமக்களுக்கும் மற்றும் சவுதி அரேபியாவில் குடியிருப்பவர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள், தடுப்பூசிகள் நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதத்தினருக்கு கிடைக்கும் என்று சவுதி சுகாதார அமைச்சகம் மேலும் எதிர்பார்க்கிறது.

சவுதி அரேபியா கோவாக்ஸ் வசதி மூலமாகவும், கூட்டமைப்பிற்கு வெளியே உள்ள நிறுவனங்கள் மூலமாகவும் தடுப்பூசிகளைப் பெறும் என்றும், தடுப்பூசி விநியோகத்திற்கான ஒரு விரிவான திட்டம் வரும் வாரங்களில் தயாராக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மார்ச் மாதத்தில் அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News