loader
15-வது பொதுத்தேர்தல்! தயார்நிலையில் தேர்தல் ஆணையம்!

15-வது பொதுத்தேர்தல்! தயார்நிலையில் தேர்தல் ஆணையம்!

கோலாலம்பூர், நவம்பர்  24-

கோவிட்-19 நோய்த் தொற்று பெருமளவு குறையத் தொடங்கி, நாட்டின் 15 வது பொதுத் தேர்தல் மேற்கொள்ளப்பட்டால், அதனை எதிர்கொள்வதற்கான திட்டங்களைத் தேர்தல் ஆணையம் வகுத்து வருவதாகவும், இத்திட்டத்தில் பாதுகாப்பு மற்றும் முறையான தேர்தல் செயல்முறைக்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பிரிவுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹாசான் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்துடன் இணைந்து பொதுத் தேர்தல் அல்லது இடைத்தேர்தலை நடத்துவதற்கான கோவிட் -19 தடுப்பு வழிகாட்டுதலைத் தயார் செய்திருப்பதாகவும் டத்தோ தக்கியுடின் ஹாசான் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் கட்டிடங்களில் கிருமி நாசினி தெளிப்பது உட்பட, பல முக்கிய அம்சங்கள் இந்த கோவிட் -19 தடுப்பு வழிகாட்டுதலில் இடம் பெற்றிருப்பதாக தக்கியுடின் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News