loader
ரஜினியின் பாஜக அரசியல்! அமித்ஷா - குருமூர்த்தி விடிய விடிய ஆலோசனை!

ரஜினியின் பாஜக அரசியல்! அமித்ஷா - குருமூர்த்தி விடிய விடிய ஆலோசனை!

 

சென்னை: ரஜினி பாஜகாவில் இணைவார் என்ற நம்பிக்கையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் ரஜினியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தமிழக அரசு விழாவில் கலந்துகொண்டபின், 
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குருமூர்த்தியுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா விடியவிடிய ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!

0 Comments

leave a reply

Recent News