loader
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வாகியுள்ளார்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்ததாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தாலும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடக்கவில்லை என பல்வேறு மாகாண அரசுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

இருப்பினும் டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே இன்று டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்.

தேர்தலை திருடாதீர்கள் என டிரம்ப் ஆதரவாளர் கோஷம் எழுப்பினர்!

0 Comments

leave a reply

Recent News