loader
சிறை குளியல் அறையில் கேமரா: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகள் குற்றச்சாட்டு!

சிறை குளியல் அறையில் கேமரா: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகள் குற்றச்சாட்டு!

 

இஸ்லாமாபாத் : தான் அடைக்கப்பட்டிருந்த சிறையின் குளியல் அறைக்குள் 'கேமரா' பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் சிறைத் துறையினர் ஈடுபட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், கடந்த ஆண்டு சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் இருந்த மூன்று மாத காலத்தில், சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து, சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

சிறையில், தன்னை ஒரு பெண் என்றுகூட பார்க்காமல், சிறைத் துறையினர் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், அதுகுறித்து இப்போது பேசினால், அதற்கு பொறுப்பான நபர்கள், தங்கள் முகத்தை வெளியில் காட்டவும் தயங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை அடைத்து வைத்திருந்த சிறைக்குள், கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததாகவும், குளியல் அறையில் கேமரா பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில், பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பது உறுதியாகிறது. பாகிஸ்தான் அல்லது எந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அவள் பலவீனமானவள் அல்ல. அதை அனைவரும் உணர வேண்டும் என்று அவர்  தெரிவித்துள்ளார்!

 

0 Comments

leave a reply

Recent News