loader
என் அன்னைக்கு நன்றி! கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி பேச்சு!

என் அன்னைக்கு நன்றி! கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி பேச்சு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார்.  தேர்தலில் ஜனநாயக கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் முதல் பெண், முதல் கருப்பின நபர் மற்றும் தெற்கு ஆசியாவை சேர்ந்த முதல் அமெரிக்க இந்திய பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனின் சொந்த நகரான டெலாவேரில் உள்ள வில்மிங்டன் பகுதியில் நடந்த பேரணி ஒன்றில் துணை ஜனாதிபதியாக தேர்வான கமலா ஹாரீஸ் கலந்து கொண்டு பேசினார.

அவர் பேசும்பொழுது, நான் இன்று அமெரிக்காவில் இருப்பதற்கு காரணமான பெண்ணான, எனது அன்னை சியாமளா கோபாலன் ஹாரிசுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.  அவர் தனது 19-வது வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தபொழுது, இந்த தருணம் பற்றி கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அமெரிக்காவில் இதுபோன்ற தருணம் அமைவதற்கு சாத்தியமுள்ளது என்று அவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தவர்.  அவரை பற்றி நான் நினைத்து பார்க்கிறேன்.  கருப்பின பெண்கள், ஆசிய, வெள்ளையின, லத்தீன், அமெரிக்க பூர்வகுடி பெண்கள் என நம்முடைய தேச வரலாற்றில் இடம்பெற்ற, இந்த தருணத்திற்காக வழியமைத்து தந்த அனைத்து பெண்களையும் நான் இந்த தருணத்தில் நினைத்து பார்க்கிறேன் என்று நெகிழ்ச்சியாக கமலா ஹாரீஸ் பேசினார்!

0 Comments

leave a reply

Recent News