loader
பிக் பாஸில் கண்கலங்கிய கமல்!

பிக் பாஸில் கண்கலங்கிய கமல்!

பின்னணி பாடகரும் பிரபல நடிகருமான திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி காலமானார்.

நடிகர் கமல் ஹாசனுக்கும் பாடகர் எஸ்.பி.பி-க்கும் இடையிலான உறவு பல ஆண்டுகளைக் கடந்தவை. அந்த உறவிற்கு மரியாதை சேர்க்கும் வகையில் எஸ்.பி.பி, கமலின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவருக்கு நேரில் அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்தை கூறி விடுவாராம்.

அப்படி கடைசியாக எஸ்.பி.பி கூறிய வாழ்த்துச் செய்தியை ஆடியோவாக வைத்துள்ள கமல் ஹாசன் அதனை பிக் பாஸ் மேடையில் போட்டுக் காட்டினார்.

அப்போது தம்பி என்று கமல் ஹாசனை எஸ்.பி.பி கூறும் பொழுது  கமல்  கண்கலங்கி விட்டார். மேலும் போட்டியாளர்களும் எஸ்.பி.பியின் குரலை கேட்டவுடன் கண்கலங்கத் துவங்கிவிட்டனர்!

0 Comments

leave a reply

Recent News