loader
17 வயது மாணவி 70 வயது தாத்தா திருமணம்! 22 நாள்களில் விவாகரத்து!

17 வயது மாணவி 70 வயது தாத்தா திருமணம்! 22 நாள்களில் விவாகரத்து!

இந்தோனேசியாவைச் சேர்ந்த 78 வயதான முதியவர், 17 வயது மாணவியைத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் செய்த இந்த ஜோடி ஒரு மாதத்திற்குள், விவாகரத்து கேட்டு அவரவர் வழிகளில் சென்றுவிட்டனர்.

திருமணமான 22 நாள்களுக்குள் தனது மனைவியை பிரிந்து செல்ல அந்த முதியவர் முடிவு செய்தார். கடந்த மாதம் திருமணம் செய்துகொண்ட அபா சர்னா மற்றும் அவரது மனைவி நோனி நவிதா என்ற தம்பதியினர் கடந்த வாரம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அபா விவாகரத்து கடிதத்தை நோனிக்கு அனுப்பிய விவகாரம், அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவருக்கும் இடையில் எந்தஒரு பிரச்னையும் இல்லாத நிலையில், ஏன் அவர் இவ்வாறு செய்தார் என்று பெண்ணின் குடும்பத்தாருக்கு இதுவரை தெரியவில்லையாம், இது குறித்து நோனியின் சகோதரி ஐயன் கூறுகையில், இருவருக்கும் இடையில் பெரிய சண்டைகள்  ஏதும் நடக்கவில்லை. ஆனால் திடீரென்று இப்படியொரு செயலை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த பிரச்னை அபா சர்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து வந்துள்ளது. அவர்கள் திருமணத்தை எதிர்த்ததாக தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளார். 
திருமணத்திற்கு முன்னர் நோனி நவிதா கர்ப்பமாக இருந்ததால் அந்த தம்பதியினர் பிரிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டினை நோனி நவிதா சகோதரி ஐயன் மறுத்துள்ளார். திருமணத்தின் போது அபா ஒரு மோட்டார் சைக்கிள், மெத்தை, கிளோசெட் மற்றும் இந்தோனேசியா பணம் RM 2,819   ஆகியவற்றை நோனிக்கு கொடுத்திருந்தார்.  இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த வரதட்சணை பொருள்கள் ஒரு டிரக் மூலம் திருப்பி கொண்டு செல்லப்பட்டன. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது!

0 Comments

leave a reply

Recent News