loader
அமெரிக்க அதிபர் தேர்தல்! ஜோ பைடன் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தல்! ஜோ பைடன் முன்னிலை!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெள்ளை மாளிகையைக் கைப்பற்ற வேண்டும் என்றால், மொத்தம் உள்ள  538 தேர்தல் வாக்குகளில் 270  வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும்.

இந்நிலையில் தேர்தல் நாளான நவம்பர் 3-ஆம் தேதிக்கு முன்னதாகவே 10 கோடி  அமெரிக்கர்கள் வாக்களித்தனர்.

தற்போது வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை கிடைத்த தகவலின் படி, ஜோ பைடன் 238 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

நிவேடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் உட்பட 7 மாகாணங்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்ந்து ஜோ பைடன் முன்னிலையில் இருப்பதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதற்கிடையில், அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக  டொனால்ட் டிரம்ப்  கூறியுள்ளார்.

இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும், வாக்குகளை எண்ணுவதில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்திற்குச் செல்வதாக அவர்  அறிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News