loader
அமெரிக்க அதிபர் தேர்தல்! ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தல்! ஜோ பிடனுக்கு வெற்றி வாய்ப்பு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை காட்டிலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் 10 சதவீதம் முன்னணியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை 3- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன், தற்போதைய அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை காட்டிலும் 10 சதவீத புள்ளிகள் முன்னிலை வகிக்கிறார் எனக் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

என்பிசி நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடையே டிரம்பிற்கு 42 சதவீதம் ஆதரவும், ஜோ பிடனுக்கு 52 சதவீத ஆதரவும் உள்ளது.

அக்டோபர் 29 முதல் 31 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 57 சதவீத வாக்காளர்கள் டிரம்ப் கொரோனா தொற்றை கையாண்டது தவறு என கூறியுள்ளார்கள். அதுபோல் 55 சதவீத பேர் டிரம்பின் நிர்வாகத்தை அங்கீகரிக்கிறார்கள்.

அமெரிக்க தேர்தலில் இதுவரை 9.3 கோடி பேர் முன் கூட்டியே வாக்களித்துள்ளார்கள். இது 2016-ஆம் ஆண்டு தேர்தலில் எண்ணப்பட்ட மொத்த வாக்குகளில் 67 சதவீதமாகும்!

0 Comments

leave a reply

Recent News