loader
இந்த ரத்தம் என்றால் கொரோனா தாக்காது?!  - - ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்

இந்த ரத்தம் என்றால் கொரோனா தாக்காது?! - - ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்

மற்ற ரத்த வகைகளைவிட ஓ ரத்த வகை உடையவர்கள் கொரோனா வைரஸால் குறைந்த அளவிலேயே பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

கொரோனா வைரசின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புதுத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சிலர் மட்டும் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்?

அதன்படி, ஒரு புதிய ஆய்வு ஒன்றில் ஓ ரத்த வகை உடையவர்கள் கொரோன வைரஸுக்கு குறைவாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது. அதாவது, வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் ஓ வகை ரத்தம் உடையவர்களை மிக குறைந்த அளவிலேயே வைரஸ் தாக்குவதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாசிட்டிவான 8000 பேரில் கிட்டத்தட்ட 38.4 சதவீதம் பேர் ஓ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் என்றும் 44.4 சதவீதம் பேர் ஏ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

வைரஸ் பாதித்த ஏ மற்றும் பி ரத்தவகையைச் சேர்ந்தவர்கள் சரிசாரியாக 13.5 நாட்கள் மருத்துவமனையில் தங்கியுள்ளனர். ஆனால், ஓ ரத்த வகை உடையவர்கள் 9 நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜூன் மாதத்தில் தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசன் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஓ ரத்த வகை உடையவர்களை காட்டிலும் ஏ ரத்த வகை உடையவர்களே கொரோனா வைரஸுக்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News