loader
கொரோனா: இன்று 660 புதிய சம்பவங்கள்! நால்வர் மரணம்!

கொரோனா: இன்று 660 புதிய சம்பவங்கள்! நால்வர் மரணம்!

புத்ராஜெயா, அக் 14: நாட்டில் இன்று 660 புதிய கோவிட் -19 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நான்காவது நாளாக  நோய்த்தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் சபாவில் 429 நோய்த்தொற்றுகள் அல்லது 65% ஆகும்.

கெடாவில் 113 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கிள்ளான் பள்ளத்தாக்கில் 11.5% சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூர் 68, கோலாலம்பூர் 7 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் உள்ள கென்சனா கிளஸ்டர் என்பது சுகாதார அமைச்சினால் கண்டறியப்பட்ட ஒரே புதிய கிளஸ்டர் ஆகும்.

நாட்டில் செயலில் உள்ள சம்பவங்கள் இப்போது 5,768 ஆகும்.

நாட்டில் ஒட்டுமொத்தமாக இத்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,540 ஆகும்.

தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 108 ஐ எட்டியுள்ளது.  வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படும் நோயாளிகள் 35 பேர் உள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 167  ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்கள் 47 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள்!

0 Comments

leave a reply