loader
என் மகளின் கல்விக்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளேன்!

என் மகளின் கல்விக்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளேன்!

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர்  அக்டோபர்- 8

ஜோகூர் பாருவைச் சேர்ந்த பழனிச்சாமி விஸ்வலிங்கம் என்பவருக்கு மூன்று பிள்ளைகள். இருதய பிரச்னை கொண்ட இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கோவிட்-19 காலக்கட்டத்தில் தனது வருமானத்திற்கும் பாதிப்பு வந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே  இங்கிலாந்தில் யூ.டபள்யூ. இ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு  ஜியாலோஜி இளங்கலைப் பட்டம் பயிலும் தனது மகளின் இறுதி ஆண்டு கல்வி  தொகையான 65 ஆயிரம் வெள்ளியை கட்ட முடியாமல் சிரமப்படுகிறார்.

தன் பிள்ளையின் எதிர்காலத்திற்காக பொதுமக்களின் உதவியை நாடி வந்துள்ளதாகக் கூறும் பழனிச்சாமி, அன்மையில் ஜோகூரில் மிஃபா இயக்கத்தின் தலைவர் டத்தோ டெவ்ஃமன்னை சந்தித்து உதவி கேட்டுள்ளார். 

அவர் ஊடகத்தின் வாயிலாகப் பொதுமக்களின் உதவியை நாடுவோம். பொதுமக்கள் நிச்சயம்  உதவி செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்து, இன்று மிஃபா அலுவலகத்தில்  செய்தியாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது.

நம் சமுதாயத்தின் எதிர்காலம்  கல்வியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகள் பிள்ளையின் படிப்பை கவனித்து வந்த இந்தத் தந்தை, கோவிட்-19 காலகட்டத்தில் வேலையை இழந்து தத்தளிக்கிறார்.

இவருக்குக் கைகொடுக்கும் விதமாகப் பொதுமக்கள் உதவ வேண்டும் என டத்தோ டெவ்ஃமன்  கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக விவரங்கள் பெற கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
பழனிச்சாமி  0108227292

உதவி  செய்ய விரும்புவோர்
Palanisamy viswanathan
4694113134  PUBLIC BANK

0 Comments

leave a reply

Recent News