loader
தாப்பா பொது நூலகத்தில் தமிழ் நூல் பிரிவு!  தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் சாதனை!

தாப்பா பொது நூலகத்தில் தமிழ் நூல் பிரிவு! தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் சாதனை!

தாப்பா பொது நூலகத்தில் தமிழ் நூல் பிரிவை ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளனர் தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கத்தினர். 

இதற்கான திறப்பு விழா வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இது குறித்து தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்க தலைவர் இரமேஸ்வரி பேசுகையில், "தாப்பா தமிழ் எழுத்தாளர் வாசகர் பண்பாட்டு இயக்கம் 10-வது ஆண்டு நிறைவை அடைந்துள்ளது. பெரியவர் குழு, இளைஞர்கள் குழு மற்றும் மாணவர் குழு என  இந்த இயக்கம் அடுத்த தலைமுறையின் தேவையை நோக்கி வெற்றிகரமாக செயல்பட்டுகொண்டிருக்கிறது.

அமைச்சரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்களின் வற்றாத ஆதரவில் தமிழ் மொழி, இலக்கியம், தமிழ்ப்பள்ளி, கலை, பண்பாடு சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வெற்றிகளைக் கண்டிருந்தாலும், அதன் தொடர்ச்சியாக தாப்பா பொது நூலகத்தில் தமிழ் நூல் பிரிவை ஏற்படுத்தி அதனை சாத்தியப்படுத்தியதை எண்ணி இயக்கத்தினர் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.  

தாப்பா பொது நூலகத்தில் தமிழ் நூல் பிரிவு அமைக்கும் திட்டத்திற்கான வேலைகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

தாப்பா வட்டாரத்தில் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும், நூலகத்தின் பயன்பாட்டை நாமது சமுதாயமும் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும் இயக்கம் இத்திட்டத்தை மேற்கொண்டது.

அதற்கு வித்திடும் வகையில் முதலில் நமது வாசகர்களை நூலகத்திற்கு வரவழைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் மாதம் தோறும் ‘வாங்க வாசிக்கலாம்’ எனும் நிகழ்ச்சியை இயக்கம் ஏற்பாடு செய்து வந்தது.   

கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ் நூல் பிரிவிற்கான முதல் விண்ணப்பக்கடிதம் பேராக் மாநில நூலகத்தின் இயக்குனருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மீண்டும்  இரண்டாவது கடிதம் கடந்த 2019 ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து தமிழ் புத்தக பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

அனுமதி வழங்கிய அதன் மாநில இயக்குனர் ஹாஜி முஹம்மட் நசாரி பின் ஹாஜி அப்துல் ஹமிட் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.     

தமிழ்ப் பிரிவுக்குத் தேவையான கல்வி, சிறுகதை, நாவல், கதை, கட்டுரை, பொது சார்ந்த தமிழ் நூல்களை எழுத்தாளர்கள், தமிழ்ப்பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்களிடமிருந்தும் சேகரித்தோம்.

இயக்கத்தின் இளைஞர் குழு முழு மூச்சாக அதன் வேளைகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இத்திட்டம் வெற்றிகண்டுள்ள நிலையில், வரும் 2-ஆம் தேதி, அக்டோபர் 2020 அன்று திறப்பு விழா காணவிருக்கும் இவ்விழாவிற்கு, மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் முழு ஆதரவினையும் வழங்கியுள்ளார். இவ்வேளையில் இயக்கத்தின் சார்பாக அவருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்!

* இரமேஸ்வரி

 

5 Comments

  • சிவநேயச்செல்வர்
    2020-09-30 05:40:24

    தமிழ் வளர்க்கும் எல்லோர்க்கும் இனிய நல்வாழ்த்து 🙏💐👍

  • A.VANAJAH
    2020-09-30 05:43:38

    அருமை வாழ்த்துகள் மலரட்டும் தமிழ் மணம் மகிழ்ச்சி.....

  • A.VANAJAH
    2020-09-30 05:43:43

    அருமை வாழ்த்துகள் மலரட்டும் தமிழ் மணம் மகிழ்ச்சி.....

  • Rameswary Raja
    2020-09-30 06:14:35

    மிக்க நன்றி தமிழ் லென்ஸ் தம்பி வெற்றி

  • துரை சந்திரன்
    2020-09-30 19:20:37

    நல்வாழ்த்துகள்

leave a reply

Recent News