loader
என் மகன் எனக்கு குழந்தை!  மகனைச் சுமக்கும் தாய்!  கை கொடுக்கும் டி.கே பிரதர்ஸ்!

என் மகன் எனக்கு குழந்தை! மகனைச் சுமக்கும் தாய்! கை கொடுக்கும் டி.கே பிரதர்ஸ்!

 

(வெற்றி விக்டர்)

காஜாங் செ-29

காஜாங் தாமான் முத்தியாராவில் 36 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளியான மகனை இன்னமும் குழந்தை போல் சுமக்கும் தாய் ஒருவர், கோவிட் -19 காலகட்டத்தில் குடும்பத்தை வழிநடத்த முடியாமல் சிரமப்படுகிறார். 

தன் மகனுக்குச் சமூகநல உதவியாக மாதம் 400 வெள்ளி  அரசாங்கத் தரப்பில் இருந்து கிடைக்கிறது. இருந்தபோதிலும் இப்போது உள்ள பொருளாதார நெருக்கடியில்,  இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்கிறார் அவர்.

இருப்பினும், தன் மகனை ஒவ்வொரு நாளும் சுமப்பதாகக் கூறும் அவர், வருமானத்திற்கு ஒரு வழி கிடைத்தால் சமாளித்து விடும் மன தைரியத்துடன் இருப்பதாகக் கூறுகிறார்.

இந்தத் தாயின் பிரச்னையை உணர்ந்த டி.கே பிரதர்ஸ் குழுவைச் சேர்ந்த டத்தோ எம்.டி கலை அரசு, டத்தோ ஷர்மிளன் தலைமையில் காஜாங் டி.கே பிரதர்ஸ், ஃபிரசிஸ் குழு அந்தத் தாயை சந்தித்தனர்.

அந்தத் தாயின் போராட்டத்தை உணர்ந்து, அவரது வீட்டு வாளகத்தில் கச்சாங் பூத்தே கடையை முழு செலவில் அமைத்துக்  கொடுக்க முன்வந்துள்ளனர். அதோடு அந்தத் தாயின் கச்சாங் பூத்தே  வியாபாரத்திற்கு வட்டார மக்கள் கைகொடுக்க வேண்டும் என டி.கே பிரதர்ஸ் குழு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.  

இந்தக் குடும்பத்திற்கு கைகொடுக்க விரும்புவோர்,  கீழ்க்காணும் எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

018-2078433

'நம் சமுதாயதிற்கு நாம்;  நம் சமுதாயத்தோடு நாம்' என்ற தாரக மந்திரத்துடன், டி.கே பிரதர்ஸ் குழு இந்தப் பயணத்தில்  களம் இறங்கியுள்ளது. இதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு!

0 Comments

leave a reply

Recent News