loader
வறுமையின் நிறம் சிவப்பு.... அதைத் துடைப்பது எங்கள் பொறுப்பு!

வறுமையின் நிறம் சிவப்பு.... அதைத் துடைப்பது எங்கள் பொறுப்பு!

 

மந்தின் செ-24

கோவிட் -19 தொற்றில் அவதியுறும் இக்கட்டான இக்காலகட்டத்தில் மந்தினில் குறைந்த வருமானம் பெற்று பல போராட்டங்களுக்கு மத்தியில் பிள்ளைகளை வளர்த்து வரும் தனித்து வாழும் தாய் ஒருவருக்கு கைகொடுத்துள்ளது 'டி.கே பிரதர்ஸ்' என்ற  அரசு சாரா அமைப்பு. 

கடந்த செ- 8-ஆம் தேதி தங்கள் பார்வைக்கு இப்படி  ஒரு பிரச்னை கொண்டுவரப்பட்டது. உடனே மந்தின் டி.கே பிரதர்ஸ் குமார் மற்றும் பாஜாம் டி.கே பிரதர்ஸ் தலைவர் மணிகண்டன் மற்றும் செயலாளர்  சத்திஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, அந்தக் குடும்பத்தின் பிரச்னையைக் கேட்டறிந்தனர்.

இந்த கோவிட் -19 காலகட்டத்தில் அவருக்கு எந்த ஒரு சமூகநல உதவியும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக மலேசிய மக்கள் சமூகநல இயக்கத்தின் தலைவர்  தனபாலன் முனியாண்டி தெரிவித்தார்.

அதோடு அந்தக் குடும்பத் தலைவி கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை மற்றும் மின்சார கட்டணத்தைக் கூட செலுத்தமுடியாத நிலையில் இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளதாக  அவர் கூறினார்.

இதனையடுத்து, அந்தக் குடும்பத்திற்கு அடிப்படை உதவிகளை டி.கே பிரதர்ஸ் மற்றும் மலேசிய மக்கள் சமூகநல இயக்கம் வழங்கியதோடு, சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு சமூகநல உதவிகள் கிடைக்க முயற்சி எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளோம் என்றார் தனபாலன்.

அதோடு, அவரது பிள்ளைகளுக்கு  பள்ளியில் சமூகநல உணவு உதவி கிடைகப்பெறாததும் எங்களுக்குத் தெரியவந்தது. என் தலைமையில் பி.கே.எம்.எம் துணைத் தலைவர் ஃபிரான்சிஸ், பாஜாம், காஜாங், மந்தின் டி.கே பிரதர்ஸ் பொறுப்பாளர்கள், சம்பந்தபட்ட பள்ளிக்கு வருகை புரிந்து விவரம் அறிந்தோம். அங்கு இந்தப் பிள்ளைகளைத் தவிர இன்னும் சில பிள்ளைகளுக்கும் இந்த உணவுத் திட்டம் கிடைக்கவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் தற்போது நாங்கள் பள்ளி நிர்வாகத்துடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தனபாலன் தெரிவித்தார்!

1 Comments

  • Francisxavier
    2020-09-23 21:04:47

    Good job

leave a reply

Recent News