loader
இளைஞர்களுக்குத் தோள் கொடுக்க ராக்கான் மைக்ரோ திட்டம்!

இளைஞர்களுக்குத் தோள் கொடுக்க ராக்கான் மைக்ரோ திட்டம்!

கோலாலம்பூர் செ- 23

ம.இ.கா  இளைஞர் பிரிவும், மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனமும்  இணைந்து மலேசியாவில் வியாபாரம் செய்ய விரும்பும் இந்திய இளைஞர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளை வழங்க ராக்கான் மைக்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.

ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் தினாளன் ராஜாகோபால் இது குறித்துப் பேசுகையில், எங்கள் இலக்கு இந்த கோவிட் -19 காலகட்டத்திற்கு முன் தொழிலில் ஈடுபட்டு சில மாதங்கள் ஆகி தற்போது தொழிலை நடத்தச் சிரமப்படும் இளம் தொழில் முனைவர்களுக்கும், தற்போது வேலையை இழந்து சிறு தொழில் செய்ய ஆர்வமாக இருக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கி, எப்படி இந்த கோவிட்- 19 காலகட்டத்தில் வியாபாரத்தில் மீண்டுவருவது போன்ற வழிகாட்டுதலுக்காகவுன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

அரசாங்க சலுகை, வியாபாரக் கடன் உதவிகள் தொடர்பாக உரிய தகவல்களை  இளம் தொழில்முனைவர்களுக்கு வழங்க மைக்கியுடன் கைகோர்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ம.இ.கா இளைஞர் பகுதி மைக்கியுடன் இணைந்து  இந்நடவடிக்கையில் நாடு முழுவதும் ஈடுபடவிருப்பதாக  தினாளன் ராஜாகோபால் தெரிவித்தார்.

மைக்கியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா கூறுகையில், மைக்கி நாடு தளுவிய நிலையில் ரக்கான் மைக்ரோ சந்திப்பை நடத்தி இதுவரை 2300 சிறு தொழில் முனைவர்களைச் சந்திதுள்ளாதாகவும், தற்போது ம.இ.கா இளைஞர் அணியுடன் இணைந்து  நடத்தும் இந்தப் பயணத்தில், அதிகமான இளைஞர்களுக்கு இது பயன் அளிக்கும் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். 

ம.இ.கா இளைஞர் பிரிவுடன் இணைந்து நடத்தப்படவிருக்கும்  ரக்கான் மைக்ரோவின்  பயணத்தின் நோக்கம் தொழிலில் புதிதாக ஈடுபட்டு, இந்த கோவிட்-19 காலகட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான இளம் தொழில்முனைவர்களைக் கைதூக்கிவிடுவதற்கே  என டத்தோ ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News