loader
26,572 பேர் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டனர்!

26,572 பேர் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டனர்!

கோலாலம்பூர்: வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 26,572 மலேசியர்களுக்கு நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

94 நாடுகளில் இருந்து 528 விமானங்கள் வழியாக அவர்கள் அனைவரும் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ கமாருடின் ஜபார் தெரிவித்தார்.

தற்போது, ​​56 பேர் மட்டுமே வெளிநாட்டில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதற்கும், வணிக விமானங்கள் வழக்கம் போல் இயங்குவதற்கும் காத்திருப்பதாக இன்று மக்களவையில்  ஜபார் கூறினார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து மலேசியர்களும் அருகிலுள்ள மலேசிய பிரதிநிதிகளிடம் பதிவுசெய்து, சரியான விசாவைப் பெறுவதால், எந்தவொரு உதவிகளையும் பெறுவதில் வசதியாக இருக்கும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு மருத்துவ சிகிச்சை, வீடு திரும்புவதற்கான வசதி உள்ளிட்ட உதவிகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக, மலேசியத் தூதரகக்குழு செயல்பட்டு வருவதாக அவர் விளக்கினார்!

0 Comments

leave a reply

Recent News