loader
வாரிசானைக் கவிழ்க்க சதியா?

வாரிசானைக் கவிழ்க்க சதியா?

செம்போர்னா (சபா): சபா மாநிலத் தேர்தலில் வாரிசான் கூட்டணி தோல்வியைத் தழுவ வேண்டும் எனும் நோக்கில், சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஷஃபி அப்டால் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சட்டமன்றத் தொகுதியிலும் நேரடி போட்டி நிலவவில்லை என்றும் இன்னும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் மூத்த அரசியல்வாதிகளே வேட்பாளர்களாகக் களமிறங்கியிருப்பதும் இதனை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக சபா வாரிசான் கட்சி தலைவருமான டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் கூறியுள்ளார்.

இதுபோன்ற திட்டங்களால் மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள். வாரிசானுக்கும், கூட்டணி கட்சிகளான பி.கே.ஆர், டி.ஏ.பி மற்றும் அமானா கட்சிகளுக்கும் கிடைக்கவுள்ள ஆதரவை உடைப்பதற்கே இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால்  இது எங்களுக்கு பெரிய சவாலான ஒன்றல்ல. ஏனெனில் தேர்வுகள் பல இருந்தாலும் சபா மாநிலத்தை ஆட்சி புரிவதற்கு மிகச் சரியானவர்கள் யார் என்பது சபா மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில், சபா, செம்போர்னாவில் பெர்னாமாவிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது ஷாஃபி அப்டால் இவ்வாறு கூறியுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News