loader
லிம் குவான் எங் மீது மேலும் இரு குற்றச்சாட்டு!

லிம் குவான் எங் மீது மேலும் இரு குற்றச்சாட்டு!


பினாங்கு மாநில முதலமைச்சராக லிம் குவான் எங் பொறுப்பு வகித்தபோது மாநில அரசுக்குச் சொந்தமான இரண்டு நிலங்களை முறைகேடான முறையில் நில மேம்பாட்டாளர்களுக்கு வழங்கியதாக இன்றைய குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நீதிபதி அகமட் அசாரி அப்துல் ஹாமிட் முன்னிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்பட்டது.

பண்டார் தஞ்சோங் பினாங் வட்டாரத்தில் உள்ள ஒரு நிலத்தை ஈவின் செனித் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு கடந்த 2015, பிப்ரவரி 17-ஆம் தேதி பினாங்கு நிலப் பதிவாளர் மாற்றித் தருவதற்கு குவான் எங் காரணமாக இருந்தார் என முதல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு 135,086,094 ரிங்கிட் ஆகும்.

கடந்த 2017, மார்ச் 22-ஆம் தேதி பினாங் வட்டாரத்திலுள்ள மற்றொரு நிலத்தை செனித் அர்பன் டெவலெப்மெண்ட் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கு மாற்றித் தருவதற்கு லிம் குவான் எங் காரணமாக இருந்தது இரண்டாவது குற்றச்சாட்டாகும். இந்த நிலத்தின் மதிப்பு 73,668,986 ரிங்கிட்டாகும்.

இரண்டு குற்றச்சாட்டுகளும் மலேசியக் குற்றவியல் சட்டம் பிரிவு 403-இன் கீழ் கொண்டு வரப்பட்டன.

குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்  5 ஆண்டுகள் சிறை, அபராதம் மற்றும் பிரம்படி  தண்டனைகள் லிம்மிற்கு வழங்கப்படலாம்!

 

0 Comments

leave a reply

Recent News