loader
ராகாவில் கேட்டுட்டு சொல்லுங்கோ! RM 500 ரொக்கம் வெல்லுங்கோ!

ராகாவில் கேட்டுட்டு சொல்லுங்கோ! RM 500 ரொக்கம் வெல்லுங்கோ!

2020 செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 25 வரை  ‘ராகாவில் கேட்டுட்டு சொல்லுங்கோ’ வானொலி (on-air) போட்டியின் வழி சுமார் RM500 வரை ரொக்கப் பரிசுகளை ராகா ரசிகர்கள் வெல்வதற்கு இதோ வந்து விட்டது ஓர் அரிய வாய்ப்பு.

ஆன்-ஏரில் அழைப்பதற்கான சமிக்ஞை கேட்டவுடன், போட்டியில் பங்குப்பெற ராகாவிற்கு அழைக்கும் ரசிகர்கள் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம்.
பின்னர், ஒலியேற்றப்படும் பாடலில் இடம்பெற்றிருக்கும் கதாநாயகன் அல்லது கதாநாயகி, யார் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஐந்து பாடல் துணுக்குகள், ஒவ்வொன்றும் ஐந்து வினாடிகளுக்கு ஒலியேற்றப்பட்டப் பிறகு, பங்கேற்பாளர்கள் 15 வினாடிகளுக்குள் சரியான வரிசையில், ஒலியேற்றப்பட்ட பாடல் துணுக்குகளில் இடம்பெற்றிருக்கும் கதாநாயகன் அல்லது கதாநாயகியை யூகித்துக் கூற வேண்டும்.
தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு சரியான பதிலுக்கும், பங்கேற்பாளர்கள்  சுமார் RM50 ரொக்கப் பரிசை வெல்வர். ஐந்து பாடல் துணுக்குகளுக்குச் சரியாகப் பதிலளிக்கும் பங்கேற்பாளர்கள் வீட்டிற்கு சுமார் RM500 ரொக்கத்தை வெல்வர்!

0 Comments

leave a reply

Recent News