loader
சொந்த நாடு, சொந்த கரன்சி.. கலக்கும் நித்தி!

சொந்த நாடு, சொந்த கரன்சி.. கலக்கும் நித்தி!

தனக்கென்று ஒரு நாடு, தன் மக்கள் என்று கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கி, பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தா, தற்போது தன் நாட்டிற்காக நாணயங்களையும் வெளியிட்டுள்ளார். விரைவில் பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியிட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

காலணா முதல் 10 காசு வரை
பழைய கால இந்திய நாணயங்களைப் போல காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்து உள்ளார் நித்யானந்தா.

மன்னர்கள் காலத்தில்தான் பொற்காசு புழக்கத்தில் இருந்தது. இப்போது அதே போல பொற்காசுகளை புழக்கத்தில் விட்டுள்ளார் நித்யானந்தா. இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கைலாசியன் டாலர் சுமார் 11.66 கிராம் தங்கத்தால் ஆனது. 11.66380 கிராம் தங்கம் ஒரு தொலா என்று அழைக்கப்படுகிறது. எஸ்.ஐ. அலகுமுறையின்படி எப்படி மி.கிராம், கிராம், கிலோ கிராம் ஆகிய அளவைகள் உள்ளதோ அதேபோல இந்து முறைமைப்படியான அளவை முறைகளில் தொலா என்பது இருந்தது. கைலாசியன் டாலர் ஒரு தொலா நாணயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரை டாலர், கால் டாலர் ஆகிய நாணயங்களும் தங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை. இந்தியாவின் மன்னராட்சிக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நாணயங்களின் வடிவில் தங்க நாணயங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

உள்நாட்டுக்கு என ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ள நித்யானந்தா, 300 பக்கம் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

தனது நாட்டிற்கு என்று புதிய கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்ட நித்யானந்தா, தன் நாடு கைலாசா எங்கிருக்கிறது என்று மட்டும் அறிவிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!

0 Comments

leave a reply

Recent News