loader
5-வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் மாஸ்க் அணிய வேண்டுமா?  உலக சுகாதார அமைப்பு விளக்கம்

5-வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் மாஸ்க் அணிய வேண்டுமா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்

ஜெனீவா: தற்போதைக்கு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் ஆகியவற்றை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலமே தொற்று பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. இதனால், கொரோனா பரவியுள்ள அனைத்து நாடுகளும் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. 

இந்நிலையில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட சிறுவர்கள் அனைவரும் பெரியவர்களை போலவே முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “ 5-வயதிற்கு உட்பட்ட குழைந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை.  6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலை பொறுத்து முகக்கவசம் அணியலாம் என தெரிவித்துள்ளது.

அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கொரோனா பரவல் உள்ளிட்டவற்றை பொறுத்து முகக்கவசம் அணிய வேண்டும்.  12-வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News