loader
போலிக் காதல் மோசடி! கணவரின் சேமிப்பை இழந்த பெண்!

போலிக் காதல் மோசடி! கணவரின் சேமிப்பை இழந்த பெண்!

ஜொகூர்: 68 வயதான ஒரு பெண் தனது மறைந்த கணவரின் சேமிப்பில் இருந்த RM 257,000 க்கும் அதிகமானவற்றை இழந்து, ஆன்லைன் காதல் மோசடியில் சிக்கியுள்ளார்.

ஜொகூர் வணிக குற்ற புலனாய்வுத் துறைத் தலைவர் உதவி கமிஷன் மொஹமட் சல்லே அப்துல்லா இது குறித்துக் கூறுகையில், அந்த பெண் பேஸ்புக் மூலம் சந்தேக நபருடன் நட்பு வைத்து சுமார் மூன்று ஆண்டுகளாக  உறவை மேற்கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சந்தேக நபர் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புதாகவும், கார் மற்றும் வீட்டை வாங்குவதற்காக 750,000 அமெரிக்க டாலர்களை (RM3.13mil) அனுப்புவதாகவும் கூறினார்.

அமெரிக்க பணப் பரிமாற்ற நிறுவனம் வழியாக பணம் மாற்றப்படும் என்றும், அந்தத் தொகை விடுவிக்கப்படுவதற்கு முன்னர் அதற்கான வரி மற்றும் சுங்க அனுமதி கட்டணங்களையும் செலுத்த வேண்டும் என்றும் அந்த சந்தேக நபர் கூறியதை அடுத்து, கோலாலம்பூரை தளமாகக் கொண்ட ஒரு பண பரிமாற்ற முகவராக காட்டிக் கொண்ட ஒரு நபரை வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு வரி மற்றும் சுங்கக் கட்டணங்களான RM 300,000 செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

தனது மறைந்த கணவரின் சேமிப்பிலிருந்து வந்த பணத்தைப் பயன்படுத்தி, பல வங்கி பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்துவதற்காக நண்பர்களிடமிருந்து அதிக கடன் வாங்கியுள்ளார் அந்தப் பெண்.

தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்தப் பெண், சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) ஜோகூர் பாரு மத்திய காவல் நிலையத்தில் போலீஸ் அறிக்கையப் பதிவு செய்தார்.

இதனையடுத்து, பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முகமட் சல்லே அப்துல்லா கூறினார்!

0 Comments

leave a reply

Recent News