loader
கொரோனா: இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது! ஒரே நாளில்  60 ஆயிரம் பேர் நலம்!

கொரோனா: இந்தியாவில் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது! ஒரே நாளில் 60 ஆயிரம் பேர் நலம்!

புதுடெல்லி: உலக அளவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரங்கள்படி, நேற்று மதியம் வரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 41 லட்சத்து 21 ஆயிரத்து 178 ஆக உள்ளது. முதல் இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 27 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். 2-ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு குணம் அடைந்தோர் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 20 லட்சத்து 37 ஆயிரத்து 870 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 91 பேர் கொரோனாவில் இருந்து நலம் பெற்று, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார்கள் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் விகிதம் என்பது 73.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்ததின் காரணமாக இறப்புவிகிதம் 1.91 சதவீதமாக சரிந்துள்ளது.

நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 514 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4-ல் ஒரு பங்கை விட குறைவு (24.45 சதவீதம்) என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News