loader
அவல் முஹர்ரத்தின் போது பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும்! - டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம்

அவல் முஹர்ரத்தின் போது பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும்! - டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம்

புத்ராஜெயா: அவல் முஹர்ரம் கொண்டாட்டங்கள் வருவதால், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், எஸ்ஓபி நடைமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், நாட்டில் இன்னும் வைரஸ் பரவல் தொடரும் பட்சத்தில் அனைத்து நடவடிக்கைகளிலும் புதிய விதிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முஸ்லிம்கள் அவால் முஹர்ரம் அல்லது மால் ஹிஜ்ராவை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) கொண்டாட உள்ளனர்.
மேலும், பொது விடுமுறை என்பதால், பலர் தங்கள் ஊர்களுக்குப் பயணிக்கும் திட்டத்தில் இருப்பார்கள்.

இதில் மாநிலங்களுக்கு இடையில் பயணம் செய்வது மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும்.

எவ்வாறாயினும், அனைத்து நடவடிக்கைகளிலும் புதிய விதிமுறைகளை கடைபிடிக்கும்போது SOP யைத் தொடர்ந்து கடைப்பிடிக்க அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.

பெரிய கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என டாக்டர் நூர் ஹிஷாம்  ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

 

0 Comments

leave a reply

Recent News