loader
கோமாவில் இந்திய முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி! கொரோனா பாதிப்பு காரணமா?

கோமாவில் இந்திய முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜி! கொரோனா பாதிப்பு காரணமா?

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் அரிபர் பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9-ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டுக் குளியல் அறையில் தவறி விழுந்தார். இதனையடுத்து ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்ததால், டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்த ரத்தக் கட்டியை அகற்றினர். ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசம் அடைந்தது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

பிரணாப் முகர்ஜி நேற்று காலை நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார்!

0 Comments

leave a reply

Recent News