loader
சிவகங்கா தொற்றை பரப்பிய முதியவருக்கு 12 ஆயிரம் அபராதம்! ஐந்து மாதம் சிறை!

சிவகங்கா தொற்றை பரப்பிய முதியவருக்கு 12 ஆயிரம் அபராதம்! ஐந்து மாதம் சிறை!

அலோர்ஸ்டார் – கெடா, குபாங் பாசுவில் உள்ள நாப்போவில் நாசிக் கண்டார் உணவகம் நடத்தி வந்த உரிமையாளர்  சிவகங்கா தொற்றைப் பரப்பியதற்காக அலோர்ஸ்டார்  மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 5 மாதங்கள் சிறைத் தண்டனையும் 12,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

நேசார் முகமட் சாபூர் பாட்சா என்ற 57 வயதுடைய அந்த நபருக்கு மாஜிஸ்ட்ரேட் முகமட் ஹாடி ஹாக்கிமி ஹாருண் இந்தத் தண்டனையை விதித்தார்.

கடந்த ஜூலை 14-ஆம் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி பணிக்கப்பட்ட போதும், நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி  அவர் நடந்து கொண்டதாக அவர் மீது 4 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி அவர் பல இடங்களுக்கு சுதந்திரமாக சென்று வந்ததால் பலருக்கு அவர் மூலம் கோவிட்-19 தொற்று பரவியது.

தமிழ்நாடு, சிவகங்கை நகரிலிருந்து அவர் நாடு திரும்பிய போது அவருக்கு இந்தத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தத் தொற்று பரவலுக்கு சிவகங்கா தொற்று என  சுகாதார அமைச்சு பெயரிட்டது!

0 Comments

leave a reply

Recent News