loader
இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு! சவால் விட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்... நிறைவேற்றிய தளபதி!

இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு! சவால் விட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்... நிறைவேற்றிய தளபதி!

சென்னை: டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய், செடிகளை நட்டு அசத்தியுள்ளார்.

டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார்.

இந்நிலையில், தளபதி விஜய் அந்த சவாலை ஏற்று செடி நடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மகேஷ் பாபு விடுத்துள்ள சவாலை ஏற்று தளபதி விஜய் வீடியோ வெளியிடுவாரா? என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.. எப்போதுமே ரசிகர்கள் பக்கம் இருக்கும் நடிகர் விஜய், நிச்சயம் இந்த சவாலை ஏற்பார் என்றும் மகேஷ் பாபுவுக்கு இதற்காக நன்றி தெரிவித்தும், விஜய் ரசிகர்கள் மகேஷ் பாபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் செடி நடும் புகைப்படங்களை பதிவிட்டு, இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு என பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் வெளியான நிலையில், அதனை தளபதி ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரொம்ப நன்றி பிரதர், இந்த பசுமை இந்தியா சவாலை முன்னெடுத்து சென்றதற்கு என நடிகர் மகேஷ் பாபு, உடனடியாக விஜய்க்கு பதில் போட்டுள்ளார். விஜய் ரசிகர்களும், மகேஷ் பாபு ரசிகர்களும் தளபதி விஜய்யின் போட்டோக்களை #Thalapathy என்ற ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்!


 

0 Comments

leave a reply

Recent News