loader
லிம் குவான் எங் கைது!

லிம் குவான் எங் கைது!

புத்ராஜெயா; ஆகஸ்ட் 6 : முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நாளை (ஆக. 7) அவர் மீது குற்றம் சாட்டப்படும்.

MACC சட்டம் 2009 பிரிவு 16 (அ) (ஏ) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று MACC கூறியது.

கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில் ஊழல் நிகழ்ந்திருப்பதற்கான குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த வழக்கு தொடர்பாக பினாங்கு, கொம்தாரில் உள்ள மாநில பொதுப்பணித்துறை, பயன்பாடுகள் மற்றும் வெள்ளத்தைக் குறைக்கும் குழுவின் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி மற்றும் துணை முதல்வர்  ராமசாமி ஆகியோர் அலுவலகங்களையும் எம்.ஏ.சி.சி பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லிம் 2008 முதல் 2018 வரை பினாங்கு முதல்வராக இருந்தார்!

0 Comments

leave a reply

Recent News