loader
பி.கே.ஆர் போன்ற ஊழல் நிறைந்த கட்சியிடம் பணம் செலுத்த மாட்டேன்! - அஸ்மின் அலி

பி.கே.ஆர் போன்ற ஊழல் நிறைந்த கட்சியிடம் பணம் செலுத்த மாட்டேன்! - அஸ்மின் அலி


பி.கே.ஆர் பொருளாளர் லீ சீயன் சுங், கட்சியை விட்டு வெளியேறிய 19 பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.ஆருக்கு தலா 10 மில்லியன் செலுத்த வேண்டும் என்று கோரினார்.

இதனையடுத்து, "நான் ஏன் அவர்களுக்கு (பி.கே.ஆர்) 10 மில்லியன் செலுத்த வேண்டும்? அப்படியே என்னிடம் பணம் இருந்தாலும், நான் அப்பணத்தை மக்களிடம் ஒப்படைப்பேன், பி.கே.ஆர் போன்ற ஊழல் நிறைந்த கட்சியிடம் ஒப்படைக்க மாட்டேன்” அஸ்மின் கூறியுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கைக் கடிதத்தில், ஏழு நாட்களுக்குள் அவர்கள் அதை செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், கட்சி அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் லீ கூறினார்.

14-வது பொதுத் தேர்தலில் பி.கே.ஆர் வேட்பாளர்களால் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களில் RM10 மில்லியன் இழப்பீடு குறிப்பிடப்பட்டுள்ளது என முந்தைய அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கிடையில், முன்னாள் பி.கே.ஆர் மகளிர் தலைவர் ஹனிசா முகமட் தல்ஹா, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று நம்புவதாகக் கூறினார். இது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

“கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கையாக இதை நான் காண்கிறேன், ஏனென்றால், கூட்டாட்சி அரசியலமைப்பு எந்தவொரு குடிமகனுக்கும் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அமைப்பிலும் சேர சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது.” என்றார்!

0 Comments

leave a reply

Recent News