loader
இந்திய மொழிகளில் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்!

இந்திய மொழிகளில் அமெரிக்க தேர்தல் பிரச்சாரம்!

அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 28 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதனால் அதிபர் தேர்தலில் இந்தியர்களின் ஓட்டு, முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியர்களின் ஓட்டை தன் பக்கம் இழுக்க டிரம்ப், பிடேன் கட்சிகள் கடும் போட்டிப்போடுகின்றன.

இதன் விளைவாக பிடேனின் பிரசாரக் குழு, தனது பெரிய அளவிலான பிரசாரத் திட்டத்தை 14 இந்திய மொழிகளில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, உருது, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட மொழிகளும் அடங்கும். இதற்காக இந்திய அரசியலில் குறிப்பிடப்படும் சில வாக்கியத்தை பயன்படுத்தி, ‛அமெரிக்கா கா நேதா கைசா ஹோ, ஜோ பிடன் ஜெய்சா ஹோ' (அமெரிக்காவின் தலைவர் பிடனைப் போல இருக்க வேண்டும்) என்ற பிரசார முழக்கத்தை உருவாக்கியுள்ளது. இதே போல் பல வாக்கியங்களை கைவசம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க தேர்தலில் இந்திய அரசியலில் பயன்படுத்திய வார்த்தைகள் இருப்பது இது முதன்முறையல்ல, கடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப், ‛ஆப் கி டிரம்ப் சர்க்கார்' என்னும் முழக்கத்தை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த வாக்கியம் இந்திய பிரதமர் மோடி ‛ஆப் கி மோடி சர்க்கார்' என பிரசார முழக்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. அந்த பிரசாரம் டிரம்பிற்கு தனித்துவமான வெற்றியாக மாறியது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News