loader
33 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!   புகை(ச்சல்)படத்தை வெளியிட்டார் மூசா!

33 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு! புகை(ச்சல்)படத்தை வெளியிட்டார் மூசா!

கோலாலம்பூர்: சபா மாநில அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, தன்னிடம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக மூசா அமான் முகநூலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்புகைப்படத்தில் மூசா அமான் உட்பட பிற சபா சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். 1 முதல் 33 வரையிலான எண்கள் கொண்ட அச்சிடப்பட்ட காகிதத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சபா ஆளுநர் ஜூஹார் மஹிருடின் ஒரு மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான தனது முயற்சியைக் கருத்தில் கொள்வது அரசியலமைப்பு கடமையாகும் என்று மூசா வலியுறுத்தினார்.

மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது என்பது உண்மை என்றால், சபா மக்களுக்கு ஒரு புதிய நிலையான அரசாங்கத்தை வழங்கவும், இந்த மாநிலத்தின் அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் போராடுவதற்காக அடுத்த தேர்தலில் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News