loader
நஜீப் குற்றவாளி!  -          நீதிபதி தீர்ப்பு

நஜீப் குற்றவாளி! - நீதிபதி தீர்ப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருந்த ஏழு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

இன்று காலை 10 மணிக்கு, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட் முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் தீர்ப்பை நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி வாசித்தார்.

67 வயதான நஜிப் மீதான ஏழு குற்றச்சாட்டுகளையும் நிரூபிப்பதில் அரசு தரப்பு வெற்றி பெற்றிருப்பதைக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

அரசு தரப்பு கொண்டு வந்த வழக்கு குறித்து நியாயமான சந்தேகங்களை உருவாக்க தற்காப்பு தரப்பு தவறிவிட்டது என்று முகமட் நஸ்லான் கூறினார்.

நஜிப் பிரதமராக இருந்தபோது, 1எம்டிபி ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், எஸ்ஆர்சி இண்டர்னேஷனல் ஆலோசகராகவும், நிதியமைச்சராகவும் இருந்தார். அதில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டத்தின் பிரிவு 23 (1)- இன் கீழ் நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது. 20 ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கிறது. ஐந்து மடங்குக்கு குறையாத அபராதம் விதிக்க வகை செய்கிறது இச்சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது!

 

0 Comments

leave a reply

Recent News