loader
SOP -யை பின்பற்றுங்கள்! இல்லையேல் கோவிட் 3-ஆம் அலை!

SOP -யை பின்பற்றுங்கள்! இல்லையேல் கோவிட் 3-ஆம் அலை!

புத்ராஜெயா, ஜூலை 27: பொது மக்கள் எஸ்.ஓ.பி நடைமுறையைப் பின்பற்றத் தவறினால், கோவிட்-19 நோயின் மூன்றாவது அலையை எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜூலை 23-ஆம் தேதிக்கு பிறகு, இன்று  கோவிட்-19 நோய் சம்பவங்களின் எண்ணிக்கை ஓர் இலக்க எண்ணாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.  நாட்டில் இன்று 7 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம்.இந்நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,904-ஆகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக டத்தோ டாக்டர் நூர் தெரிவித்தார்.

இன்று பதிவு செய்யப்பட்ட ஏழு சம்பவங்களில், நான்கு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து பரவியதாகும். வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களில் மூவர் மலேசியர் என்றும், எஒருவர் மலேசியப் பிரஜை அல்லாதவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகவில்லை.மொத்த மரண எண்ணிக்கை 124 என்கிற நிலையில் உள்ளது!

0 Comments

leave a reply

Recent News