loader
மீண்டும் MCO-வா?!

மீண்டும் MCO-வா?!

கோலாலம்பூர்: நாட்டில் மீண்டும் பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வி தற்போது பொதுமக்கள் மத்தியில் பரவலாகக் கேட்கப்படுகிறது.

இந்நிலையில்,  ஒரு நாளில் பதிவாகும் கோவிட் சம்பவங்களின் பதிவுகள் மூன்று இலக்க எண்ணை அடைந்தால், மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தற்காப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கோடி காட்டியுள்ளார்.

சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால், கட்டுப்பாட்டு ஆணையை மீண்டும் அமல்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதனால், தொற்று நோயைக் கட்டுப்படுத்த ஆரம்பத்தில் செய்யப்பட்டதைப் போலவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த நான்கு நாட்களாக கோவிட் 19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கையின்படி, இந்த எண்ணிக்கை அதிகரிப்பு நம்முடைய சொந்த அலட்சியத்தால் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறும்போது, இறுதியாக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
சம்பவங்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை உள்ளடக்கினால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை செயல்படுத்தப்படும். எங்களுக்கு வேறு வழியில்லை என்று அமைச்சர் விளக்கினார்!

 

 

0 Comments

leave a reply

Recent News