loader
2020--ல் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் ஆயுட்காலம்! - மலேசியப் புள்ளிவிவரத் துறை!

2020--ல் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதல் ஆயுட்காலம்! - மலேசியப் புள்ளிவிவரத் துறை!

புத்ராஜெயா : 2020-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலம் 74 ஆண்டுகள் 9 மாதங்களாக இருக்கும் ஒரு என மலேசியப் புள்ளி விவரத்துறை கணித்திருக்கிறது.

2014-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2020-ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்குக் கூடுதல் ஐந்து மாதங்கள் ஆயுட்காலம் இருப்பதாக மலேசியப் புள்ளி விவரத்துறை வெளியிட்ட 2018-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரைக்குமான மலேசிய குறுகிய ஆயுட்கால அட்டவணையில குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2020-ஆம் ஆண்டில் பிறந்த பெண் குழந்தையின் சராசரி ஆயுட்காலம் 77 ஆண்டுகள், 6 மாதங்களாகும். ஆண் குழந்தையுடன் ஒப்பிடுகையில், இது ஐந்து ஆண்டுகள் அதிகமாகும். 2020-ஆம் ஆண்டில் பிறந்த ஆண் குழந்தைகளின் ஆயுட்காலம் 72 ஆண்டுகள் 6 மாதங்கள் என்று அத்துறை கணித்திருக்கிறது.

2020-ஆம் ஆண்டில், 15 வயதை அடையும் ஆண் குழந்தைகளின் ஆயுட்காலம் 58 ஆண்டுகள் 4 மாதங்கள் என்றும் பெண் குழந்தைகளின் ஆயுட்காலம் 63 ஆண்டுகள் 2 மாதங்கள் என்றும் அத்துறை மேலும் குறிப்பிட்டிருக்கிறது. 60 வயதடைந்தவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டில் 35 லட்சம் பேர் என்றும், இது 2019-ஆம் ஆண்டில் 34 லட்சமாக இருந்ததாகவும் இவ்வாண்டின், மக்கள் தொகை கணிப்பு காட்டுகிறது.

அதுமட்டுமின்றி, சரவா, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் வாழும் ஆண்களின் ஆயுட்காலமும் கோலாலம்பூர், பினாங்கு மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பெண்களின் ஆயுட்காலமும் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News